நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார். அவருக்கு வயது 90. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் எளமக்கரையில் உள்ள வீட்டில் உயிரிழந்தார். அவரது மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவரது மறைவையொட்டி பலரும் இணையத்தில் மோகன்லாலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மோகன்லாலின் தந்தை விஸ்வநாதன் நாயர் ஏற்கனவே காலமாகி விட்டார்.








