Oct 20, 2025
Thisaigal NewsYouTube
மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சிக்கல் வந்தால்? விஜய்யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!
சினிமா

மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு சிக்கல் வந்தால்? விஜய்யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை..!

Share:

அக்டோபர் 24-

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு உதவுவதற்காக வழக்கறிஞர்களை 234 தொகுதிகளுக்கும் விஜய் நியமனம் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, மாநாட்டுப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நமது கழகத்தின் சார்பில், கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு, மாநாட்டில் பங்கேற்கும் கழகத் தோழர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் சட்ட ரீதியில் உதவிடும் வகையில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மாநாட்டிற்கான தற்காலிகத் தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தற்காலிக தொகுதிப் பொறுப்பு வழக்கறிஞர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள சட்டமன்றத் தொகுதிகளிலும், மாநாட்டிற்கு வகும் கழகத் தோழர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ரீதியான உதவிகளை மேற்கொள்வார்கள்

Related News