நடிகர் கமல்ஹாசன் ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நடிகர்கள் பலரும் கமலுக்கு கிடைத்த பெருமைக்காகப் பாராட்டி வருகின்றனர். தற்போது தெலுங்கு நடிகர் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கமல் பற்றி போட்டிருக்கும் ட்வீட் வைரல் ஆகி இருக்கிறது.
கமல் கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக நடிப்புத் துறையில் இருப்பவர். அவர் ஒரு சாதாரண நடிகர் எனச் சொல்ல முடியாது. ஒரு நடிகராக, கதாசிரியராக, இயக்குனராக மிக அற்புதமான அறிவு மற்றும் திறமை கொண்டவர். இதில் பல தசாப்தங்கள் அனுபவம் கொண்டவர். இந்திய சினிமா மட்டுமின்றி உலக சினிமாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் இன்னும் பல ஆண்டுகள் இதைச் செய்ய வேண்டும் என விரும்புகிறேன், மனமார்ந்த வாழ்த்துக்கள் என பவன் கல்யாண் பதிவிட்டு இருக்கிறார்.