Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பேஸ்புக், ட்விட்டருக்கு டஃப் கொடுக்க நினைத்த ரஜினி மகள் சௌந்தர்யா! 2 வருடத்தில் இழுத்து மூடப்பட்ட நிறுவனம்!
சினிமா

பேஸ்புக், ட்விட்டருக்கு டஃப் கொடுக்க நினைத்த ரஜினி மகள் சௌந்தர்யா! 2 வருடத்தில் இழுத்து மூடப்பட்ட நிறுவனம்!

Share:

இந்தியா, ஜூலை 11-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வாய்ஸ் மூலம் மெசேஜ் அனுப்பும் செயலி நிறுவனந்தை துவங்கிய நிலையில் அதனை தற்போது இழுத்து மூடிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பதை தாண்டி, ஒரு இயக்குனராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா ரஜினிகாந்த். தன்னுடைய தந்தையை வைத்து இவர் இயக்கிய 'கோச்சடையான்' திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில், எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. இந்த படத்தின் நஷ்டம் குறித்த பஞ்சாயத்து கூட இன்னும் ஓய்ந்தபாடில்லை.


இதை தொடர்ந்து, தன்னுடைய அக்காவின் முன்னாள் கணவர் தனுஷை வைத்து இவர் இயக்கிய திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி 2'. இந்த படம் முதலுக்கு மோசம் இல்லாத வெற்றியை பெற்றது. இந்த படத்தில் தனுஷ் அமலாபாலுடன் இணைந்து நடித்த போது தான், இருவரும் நெருக்கம் காட்டியதாக சர்ச்சை எழுந்தது. பின்னர் அது ரஜினிகாந்த் வரை சென்றதாக கூறப்பட்டது.

ரஜினிகாந்த் போலவே அவரின் மகள்கள் இருவருமே... ஏதாவது ஒரு விஷயத்தை செய்து கொண்டு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருப்பவர்கள். ஐஸ்வர்யா முழுக்க முழுக்க ஆன்மீகத்திலும், இயக்கத்திலும் ஆர்வம் காட்டும் நிலையில், சொந்தர்யா அக்காவையே மிஞ்சும் வகையில் பல பிஸ்னஸ் மற்றும் வெப் சீரிஸ் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

Related News