தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் கௌதம் மேனன். ஸ்டைலிஷ் நாயகன், ஆங்கில பேச்சு என அவரது பட ஸ்டைலே வேறு மாதிரி இருக்கும். அப்படி இவர் கடந்த 2017ம் ஆண்டு விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற படத்தைத் தொடங்கினார்.
விக்ரம் உடன் திவ்யதர்ஷினி, ராதிகா சரத்குமார், ரித்து வர்மா, சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தார்கள்.
இதில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த கௌதம் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி அமைந்தது. வாரணம் ஆயிரம் படத்திற்கு பின் சுமார் 7 வருடங்களுக்கு பிறகு இப்படம் மூலம் இணைந்தார்கள்.
இப்படம் 2017ம் ஆண்டே முடிக்கப்பட்டது, ஆனால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம், வெளிநாட்டில் படப்பிடிப்பு என செலவு அதிகமாக நிதி நெருக்கடியால் இப்படத்தின் பணிகள் அப்படியே முடங்கின.
தற்போது படம் குறித்த கௌதம் மேனன் கூறியது என்னவென்றால், இப்படத்தின் நிதிப் பிரச்சனை முடியும் தருவாயில் இருப்பதாகவும், விரைவில் படத்தின் அப்டேட் வெளியிடப்படும் என்றும் கூறி இருக்கிறார்.








