நடிகர் சித்தார்த் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம்தான் சித்தா. இந்த படத்தில் நிமிஷா சஜயன், பேபி சஹஸ்ரா ஸ்ரீ நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியிருக்கிறார். சித்தா திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்துவந்த ரசிகர்கள் படத்தையும் படத்தின் கதையையும் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சித்தார்த்தின் சித்தா
இந்நிலையில், கன்னட மொழியிலும் இந்த படம் வெளியாகியிருக்கிறது. கன்னடத்தில் 'சிக்கு' என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே காவேரி நீர் பிரச்னையில் தமிழகமும் கர்நாடகாவுக்கு எதிரும் புதிருமாக நின்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ் நடிகரான சித்தார்த் அவரின் சிக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள கர்நாடக சென்றார். பத்திரிகையாளர் சந்திப்பில் புகுந்த கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் கூச்சலிட்டனர்.
சிக்கு பட நிகழ்வில்
நடிகர் சித்தார்த்தும் அந்த இடத்திலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் அவர்களது கருத்துக்களை கூறிவந்தனர். ரசிகர்களோ, "ஜெயிலர் படத்தில் நடித்த கன்னட நடிகரான சிவாண்ணாவை நாங்கள் கொண்டாடி வருகிறோம், ஆனால் சித்தார்த்துக்கு இந்த நிலைமையா ?" என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிரகாஷ் ராஜின் பதிவு