Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ..வைரலாகும் கமெண்ட் - காவல் ஆணையரிடம் புகார்!
சினிமா

நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ..வைரலாகும் கமெண்ட் - காவல் ஆணையரிடம் புகார்!

Share:

அக்டோபர் 17-

ஆபாச வீடியோ தொடர்பாக ஓவியா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓவியா

மலையாள நடிகையான ஓவியா கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

பின்னர் படவாய்ப்புகள் குறைந்த போது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். தற்போது தமிழில் சம்பவம், ராஜபீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஓவியா குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் சமூகவலைதளங்களில், ஓவியா குறித்த செய்திகள் வைரலாக பரவியதை தொடர்ந்து,

ரசிகர்கள் நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்ப தொடங்கினர். அந்த ஆபாச வீடியோ குறித்து ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆபாச வீடியோ

இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும், ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டதாகவும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார்.

தவறான வீடியோவை பரப்புவதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதில் ஓவியா உறுதியுடன் இருப்பதாகவும், ஆனால் பிரச்சினையின் உணர்திறன் காரணமாக

குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்த குறிப்பிட்ட விவரங்களை வெளியிடுவதை தவிர்த்தார் ஓவியா தவிர்த்ததாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ விவகாரம் அறிந்த ரசிகர்கள், ஓவியாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில்,

வீடியோ ஒன்று வந்திருக்கிறது மேடம் என்று சொல்ல, அதற்கு எஞ்சாய் என்று பதில் அளித்துள்ளார். அதேபோல், இன்னும் கொஞ்சம் லென்த்தா எடுத்திருக்கலாம் என்று சொல்ல, நெக்ஸ்ட் டைம் ப்ரோ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

Related News