Oct 19, 2025
Thisaigal NewsYouTube
Thug Life (தக் லைஃப் ) படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோலாலம்பூர் வந்தார் நடிகர் கமல்ஹசான்
சினிமா

Thug Life (தக் லைஃப் ) படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் கோலாலம்பூர் வந்தார் நடிகர் கமல்ஹசான்

Share:

கோலாலம்பூர், மே.31-

மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ் , அபிராமி உட்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள Thug Life (தக் லைஃப் ) திடைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை த்ரிஷா இன்று கோலாலம்பூர் வந்தனர்.

தக் லைஃப், திரைப்படம் வரும் ஜுன் 5 ஆம் தேதி ஏக காலத்தில் உலகமெங்கும் திரையரங்குகளை அலங்கரிக்கவிருக்கிறது.

இதனையொட்டி, இன்று பிற்பகலில் கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய 70 வயது கமல், தம்முடைய மலேசிய ரசிர்களுக்கு தக் லைஃப், நல்லதொரு விருந்தாக வழங்கவிருப்பதாக குறிப்பிட்டார்.

தக் லைஃப் என்ற இந்தக் குழந்தைக்காகத் தாங்கள் கடுமையாக உழைத்தாகவும், அந்தக் குழ்ந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை இப்போது தமது ரசிகர்களிடம் ஒப்படைப்பதாகவும் கமல் கூறினார்.

1987 ஆண்டு நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு மணிரத்னமும், கமலஹாசனும் இணைந்து கைக்கோர்த்துள்ள தக் லைஃப், ஓர் ஆன்மீகத் தொடர்ச்சி என்று இந்தியப் பத்திரிகைகள் வர்ணித்துள்ளன.

கமலும், மணிரத்னமும் இணைந்து தக் லைஃப் திரைக்கதையை எழுதியுள்ளனர். நிழல் உலகின் தாதாக்களைப் படம் சித்திரிக்கிறது. சக்திவேலுக்கும், மாணிக்கத்திற்கும் இடையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், சக்திவேலு பாத்திரத்தில் கமல் தோன்றியுள்ளார்.

ஹே ராம், இந்தியன், விக்ரம் மற்றும் விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தன்னிகரற்ற நடிப்பை வெளிப்படுத்திவர் உலக நாயகன் கமல்.

இந்த தக் லைஃப் திரைப்படத்தில் தனது கதாபாத்திரம், தன்னிடம் உள்ள அனைத்தையும் எதிர்த்துப் போராடும் ஒருவர் என்று கமல் கூறினார்.

மலேசியாவில் மீண்டும் படம் எடுக்க ஆர்வமாக உள்ளீர்களா? என்று கமலிடம் செய்தியாளர்கள் வினவிய போது, கடந்த காலத்தில் இங்கு பல காட்சிகளைப் படமாக்கியதாகவும், எதிர்காலத்தில் அவ்வாறு செய்யத் தயாராக இருப்பதாகவும் பகிர்ந்து கொண்டார்.

"நான் இங்கு பலமுறை வந்திருக்கிறேன். எனக்கு மலேசியாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். கலாச்சாரம் மற்றும் மொழியை விட நாங்கள் அதிக விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் என்று தாம் நினைப்பதாக கமல் பதில் அளித்தார்.

செய்தியாளர் சந்திப்பைத் தவிர, இன்று மாலையில் மைடவுன் கோலாலம்பூரில் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பிலும் கமல் பங்கேற்றார்.

Related News