Oct 20, 2025
Thisaigal NewsYouTube
பெண்களால் முடிவது ஆண்களால் முடியல: பாவப்படும் நித்யா மேனன், ஃபீல் பண்ணும் ஆண்கள்
சினிமா

பெண்களால் முடிவது ஆண்களால் முடியல: பாவப்படும் நித்யா மேனன், ஃபீல் பண்ணும் ஆண்கள்

Share:

இந்தியா, பிப்ரவரி 23 -

குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு வந்தவர் நித்யா மேனன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுவதற்கு பெயர் போனவர். தனுஷ் இயக்கியிருக்கும் ராயன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நித்யா.

33 வயதாகும் நித்யா மேனனுக்கு திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடக்கும்போது சொல்கிறேன் என்று இருக்கிறார் நித்யா.

மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார் நித்யா. தைரியமான நடிகை என பெயர் எடுத்தவர். இந்நிலையில் பேட்டி ஒன்றில் நித்யா மேனன் சொன்னதை கேட்ட ரசிகர்களோ, இப்படி உண்மையை சொல்ல தனி தைரியம் வேண்டும். அனைத்து நடிகைகளும் இப்படி உண்மையை சொல்ல மாட்டார்கள் என பாராட்டுகிறார்கள்.

எல்லா நேரத்திலும் எனக்கு தன்னம்பிக்கை இருக்காது. சுயமரியாதையுடன் நடந்து கொண்டால் போதும் என பேட்டியில் நித்யா கூறியது தான் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. தன்னம்பிக்கை இல்லாவிட்டாலும் எந்த சூழலிலும் நான் தன்னம்பிக்கையுடன் இருப்பேன் என சொல்லும் ஆட்களுக்கு மத்தியில் நித்யா மேனன் வித்தியாசமானவர் என்கிறார்கள் ரசிகர்கள்.

ஆண்கள் அழக் கூடாது என சொல்லி சொல்லி வளர்க்கிறார்கள். அதனால் யாராவது ஒரு ஆண் அழுதால் அதை வியந்து பார்க்கிறார்கள். இந்நிலையில் அழ முடியாத ஆண்களை பார்த்து பாவப்படுவதாக தெரிவித்துள்ளார் நித்யா.

Related News