இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு சின்ன கௌரவத் தோற்றத்தில் நடித்து இருந்தார். ஆரம்பத்தில் அது பற்றி பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்தை பார்த்த பின் ரசிகர்கள் அமீர்கானை ட்ரோல் தான் செய்தனர். இப்படி ஒரு ரோலில் அவர் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டார் எனவும் பலரும் கருத்து கூறினர்.
அந்தப் படத்திற்குப் பிறகு லோகேஷுடன் அமீர்கான் ஒரு தனி படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. மறுபுறம் லோகேஷ் கனகராஜ் தான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிப்பதற்காகச் சென்று விட்டார்.
அடுத்து அவர் கைதி இரண்டாம் பாகம் இயக்கப் போகிறார் என்னும் தகவல் கூட வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது அமீர்கான் அளித்த பேட்டியில் லோகேஷுடன் தாம் தற்போதும் பேசிக் கொண்டுதான் இருப்பதாகவும், அந்தப் படம் இன்னும் கைவிடப்படவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
"லோகேஷ் உடன் சந்திப்பு இந்நேரம் நடந்திருக்க வேண்டும். அவர் கூடிய விரைவில் மும்பைக்கு வந்து கதை சொல்வதாகக் கூறியிருக்கிறார். அதனால் படம் தற்போது உயிருடன் தான் இருக்கிறது, கைவிடப்படவில்லை" என அமீர்கான் தெரிவித்து இருக்கிறார்.








