Jan 16, 2026
Thisaigal NewsYouTube
அஜித் நடிக்கும் ஏகே64 படத்தில் மோகன் லால் இணைகிறாரா?
சினிமா

அஜித் நடிக்கும் ஏகே64 படத்தில் மோகன் லால் இணைகிறாரா?

Share:

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமாரின் 64வது (AK64) படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியவர்கள் இப்படத்திலும் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News