Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிம்பு- வெற்றிமாறன் படம் குறித்து தகவல் கொடுத்த தயாரிப்பாளர்
சினிமா

சிம்பு- வெற்றிமாறன் படம் குறித்து தகவல் கொடுத்த தயாரிப்பாளர்

Share:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் அறிவிக்கப்பட்டது. இந்த புதிய படம், வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் 'கேங்ஸ்டர்' கதை என்றும், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

முதற்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் கைவிடப்பட்டுள்ளதோ என்ற கேள்வி எழுந்தது. சம்பள விவகாரம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளருக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிம்பு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

தற்பொழுது இந்த கேள்விகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "தொடங்கியது! மற்றவர்களின் அலறலைத் தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்." எனப் பதிவிட்டுள்ளார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

Related News