இந்தியா, பிப்ரவரி 24 -
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை ஜெய் பீம் புகழ் ஞானவேல் இயக்கி வருகின்றார். ஜெயிலர் படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று தரமான கம்பேக் கொடுத்த ரஜினி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் தான் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் திரையில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
என்னதான் லால் சலாம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ரஜினியின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதையடுத்து அனைவரும் வேட்டையன் படத்திற்காகத்தான் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வருகின்றன.
அதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. இந்நிலையில் ரஜினி என்னதான் இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவரின் திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் ரஜினி காண்பது என்பது கடினமான காரியமாகும். ஆனாலும் ரஜினி ஒரு சில முறை யாருக்கும் தெரியாமல் மாறுவேடத்தில் தன் திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து பார்த்திருக்கிறார்.
அதுபோல ஒருமுறை தான் நடித்த திரைப்படம் ஒன்றை ரசிகர்களுடன் திரையில் பார்த்தபோது நடந்த சம்பவம் பற்றி பேசியிருக்கிறார் ரஜினி. திரையரங்கிற்கு ரஜினி மாறுவேடத்தில் படம் பார்க்க சென்றுள்ளார். கேப், கண்ணாடி எல்லாம் அணிந்து ஆளே அடையாளம் தெரியாத வகையில் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்துள்ளார் ரஜினி. முழு படத்தையும் பார்த்த ரஜினி திரையரங்கிற்கு வெளியே வந்துள்ளார்.