Nov 12, 2025
Thisaigal NewsYouTube
ஒப்புக் கொண்ட பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்
சினிமா

ஒப்புக் கொண்ட பின் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம்

Share:

கடந்த 2004ம் ஆண்டு சேரனின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஆட்டோகிராப்.

இப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி அதாவது 21 ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு செய்யப்படவுள்ளது. இதனால் சேரன், சினேகா என படக்குழுவினர் அனைவரும் அண்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். படம் குறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்தனர்.

இந்தப் படத்தில் சேரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வைக்க விக்ரமைத்தான் அணுகியுள்ளனர். ஆனால் அவர் நடிக்கவில்லை.

இது குறித்து சேரன் ஒரு பேட்டியில், சேது படம் நடித்ததில் இருந்து நல்ல படம் பண்ணனும்னு என்கிட்ட சொல்லிட்டே இருந்தார் விக்ரம்.

ஆட்டோகிராப் கதையை கேட்டு ஓகே சொன்னார். அதற்குள் ஜெமினி பட வாய்ப்பு வந்து விட்டது. அதில் நடித்துவிட்டு உங்கள் படத்தில் நடிக்கிறேன் என சொன்னார்.

ஆனால் ஜெமினி சூப்பர் ஹிட் ஆனதும் ஆட்டோகிராப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.


Related News