Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஜெயிலர் 2-ன் அடுத்தக் கட்டப்  படப்பிடிப்புக்குத் தயாரான ரஜினி
சினிமா

ஜெயிலர் 2-ன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்குத் தயாரான ரஜினி

Share:

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் முதல் பாகத்தில் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ஜெயிலர் 2டின் முதல் கட்டப் படப்பிடிப்புப் பணிகள் கேரளா பகுதியில் நடைபெற்றது.

படத்தில் தற்போது நடிகர் ஃபகத் ஃபாசில் , மோகன்லால், தெலுங்கு நடிகர் பாலையா இணைந்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்புப் பணிகள் கூடிய விரைவில் மைசூரில் நடைபெறவிருக்கிறது. அதற்கடுத்து இலங்கையிலும் சென்னையிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

Related News