Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?
சினிமா

கூலி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?

Share:

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கேட்டதாகக் கூறப்படுகிறது. அது குறித்து நெல்சன் ரஜினியிடம் பேசிய நிலையில் அவர் சம்மதிக்கவில்லை என்ற செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது கூலிபடத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதுவும் பிளாஷ்பேக் காட்சிகளில் ரஜினியின் இளமை தோற்றத்தில் நடிப்பதாகச் சொல்கின்றனர்.

ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் ரஜினி கண்டிப்பாக இதற்கு சம்மதிக்க மாட்டார். ஆகையால் சிவகார்த்திகேயன் கூலி படத்தில் பாடல் வரிகள் எழுதி இருக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால் ஏதாவது சில காட்சிகளில் குரல் கொடுத்து இருக்கக் கூடும். இதனால் கூலி படத்தில் சிவகார்த்திகேயன் இருப்பது கிட்டத்தட்ட உறுதியான செய்தி தான். ஆனால் அதில் எவ்வாறு பங்களித்திருக்கிறார் என்பது படம் வெளியானால் தெரியவரும்.

இப்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. அமரன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இப்போது அவரது நடிப்பில் பராசக்தி மற்றும் மதராசி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

Related News