Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் நடிக்க வரும் பூஜா
சினிமா

மீண்டும் நடிக்க வரும் பூஜா

Share:

'உள்ளம் கேட்குமே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா. 'அட்டகாசம்', 'ஜே.ஜே.', 'நான் கடவுள்', 'ஓரம்போ' என பல படங்களில் நடித்த பூஜா, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாள படங்களிலும் வலம் வந்தார்.

இலங்கையைச் சேர்ந்தவரான பூஜா, 2016-ம் ஆண்டு தொழில் அதிபர் பிரசான் டேவிட் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய பூஜா, கணவரின் தொழிலையும் சேர்த்து கவனித்துக் கொண்டு வந்தார். அவ்வப்போது இலங்கை படங்களில் தலைகாட்டி வந்தார்.

இதற்கிடையில் பூஜா தமிழ் சினிமாவுக்கு வருகிறார் என்று கூறப்படுகிறது. 2 இயக்குனர்கள் அவரிடம் கதை சொல்லியிருக்கிறார்களாம். கதையும் நடிகைக்கு பிடித்துப் போனதால் விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News