தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் கடைசியாக தக் லைப் திரைப்படம் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், 'பாகுபலி' இல்லையென்றால் 'பொன்னியின் செல்வன்' படங்களை எடுத்திருக்க மாட்டேன் என்று மணிரத்னம் பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "பாகுபலி படம் இல்லையென்றால், பொன்னியின செல்வன் என்ற படம் இருந்திருக்காது. ராஜமௌலி அந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்காமல் இருத்திருந்தால் இந்தப் படத்தை நான் எடுத்திருக்க மாட்டேன்.
நான் ராஜமௌலியைச் சந்தித்தபோது அதை அவரிடமே சொன்னேன்" என்று மணிரத்னம் தெரிவித்துள்ளார்.








