ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர்படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவின. இதனால் அடுத்து ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கும் ஷங்கர் கையில் எடுத்து இருக்கும் அஸ்திரம் தான் வேள்பாரி.
சு வெங்கடேஷனின் வேள்பாரி நாவலைப் படமாக எடுக்க வேண்டும் என்பது ஷங்கரின் கனவு. ஆரம்பத்தில் இக்கதையின் நாயகனாக சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் அண்மைய காலமாக சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை.
மேலும் சில காரணங்களினால் சூர்யா இந்த படத்தில் நடிக்காத நிலையில் ஷங்கர் வேறு திட்டம் போட்டு இருக்கிறார். அதாவது ரஜினி மற்றும்கமல் இருவரையும் ஒன்றாக இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று முயற்சி செய்து வருகிறாராம்.
ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் போன்ற படங்களையும், கமலை வைத்து இந்தியன் படத்தையும் ஷங்கர் இயக்கி இருக்கிறார். ஆகையால் இப்போது இரு நடிகர்கள்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சம்மதித்தால் உடனடியாக படப்பிடிப்பு தொடங்கப்படும்.
ஆனால் ஷங்கரின் படத்தை லைக்கா, சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க முன்வரவில்லை. ஏனென்றால் தொடர்ந்து பெரிய நஷ்டத்தைக் கொடுத்ததால் இந்த நிறுவனங்கள் பின்வாங்கி விட்டன. ஆகையால் வெளிநாட்டு நிறுவனம் மூலம் படத்தை தயாரிக்கலாம் என்று ஆர்வம் காட்டி வருகிறார்கள்.