Nov 14, 2025
Thisaigal NewsYouTube
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்
சினிமா

ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்

Share:

தமிழ் சினிமாவின் பெருமை ரஜினிகாந்த், கமல் ஹாசன். இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது.

அதுவும் இயக்குநர் சுந்தர் சி இப்படத்தை இயக்கப் போகிறார் என அறிவிப்பு வீடியோவை வெளியிட்டனர். இது கமல் - ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால், தற்போது மிகப் பெரிய அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினி - கமல் இணையும் இப்படத்தைத் தான் இயக்கவில்லை, படத்திலிருந்து வெளியேறுகிறேன் என்று சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அறிவிப்பு வெளிவந்து சில நாட்களே ஆகும் நிலையில், படத்திலிருந்து விலகுவதாக சுந்தர் சி அறிக்கையை வெளியிட்டுள்ளார். சுந்தர் சி-க்கு பதிலாக வேறு யார் ரஜினியின் 173வது படத்தை இயக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News