சமந்தா தனது தமிழ் திரையுலக பயணத்தை விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் யே மாயா சேசவேயின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் நடித்தநீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், தெறி, 24, மெர்சல், சீமராஜா போன்ற பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவரது நடிப்பில் வெளிவந்த முக்கியமான ஹிட் படம் தெறி. விஜய் சமந்தா ஜோடி ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதன்பின்னர் 24 திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். அதோடு இளம் ஹீரோக்களுடனும் தயக்கமின்றி நடித்து ஆதரவளித்தார்.
இந்நிலையில் சமந்தா 2013 ல் மணிரத்னம்இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளி வந்த கடல் படத்திலும், 2015 ல்ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளி வந்த ஐபடத்திலும் தாம் ஹீரோயின் ஆக நடிக்க இருந்ததாகக் கூறியுள்ளார்.
இருப்பினும் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த இரு படங்களிலும் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மணிரத்னம், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களுடன் பணி புரியாமல் போனது தனக்கு வருத்தமளிக்கிறது என்று சமந்தா தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.