Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலின் Promo
சினிமா

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 2' படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலின் Promo

Share:

இந்தியா, ஏப்ரல் 25-

புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், மே-1-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் 'புஷ்பா 2 '. இந்த படத்தின் முதல் பாகம் 'புஷ்பா தி ரைஸ்' என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் புஷ்பராஜ் என்கிற கதாபாத்திரமாகவே அல்லு அர்ஜுன் வாழ்ந்து நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறினர். மேலும் இந்த படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதன் மூலம் தெலுங்கில் தேசிய விருது பெரும் முதல் நடிகர் என்கிற பெருமையும் பெற்றார் அல்லு அர்ஜுன்.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில், அல்லு அர்ஜுன் கவனம் செலுத்தி வருகிறார், 'புஷ்பா தி ரூல்' என்கிற பெயரில் இப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகமே சுமார் 500 கோடி வசூலை வாரி குவித்த நிலையில், இரண்டாவது பாகத்தை ரசிகர்களுக்கு பிடித்தது போல் ஒவ்வொரு காட்சியும் இயக்குனர் சுகுமார் செதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடந்து வரும் நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி.. அதாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான பையரின் பாடல் மே ஒன்றாம் தேதி, காலை 11:07 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே பட குழு அறிவித்திருந்த நிலையில், இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ. இந்த படத்தை மைத்ரேயி மூவி மேக்கர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News