Jan 16, 2026
Thisaigal NewsYouTube
பகடியும் அதிரடியும்
சினிமா

பகடியும் அதிரடியும்

Share:

லாஸ் ஏஞ்சல்ஸ், ஏப்ரல் 26-

‘டெட்பூல் & வூல்வரின்’ படத்தின் ட்ரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மார்வெல் நிறுவனம் இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பே இங்கே மிக பிரபலமாக இருந்த சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்களில் ஒன்று ‘வூல்வரின்’. எக்ஸ் மேன் படங்களின் வாயிலாக உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த இந்த கதாபாத்திரத்துக்கான காப்புரிமை அப்போது 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்திடம் இருந்ததால் இது பல வருடங்களாக மார்வெல் படங்களில் இடம்பெறாமல் இருந்துவந்தது.

தற்போது 20த் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தை டிஸ்னி வாங்கிவிட்டதால் எக்ஸ் மென் கதாபாத்திரங்களும் இனி வரும் மார்வெல் படங்களில் இடம்பெற உள்ளனர். அந்த வகையில் 2017ஆம் ஆண்டு வெளியான ‘லோகன்’ படத்துக்குப் பிறகு ‘வூல்வரின்’ கதாபாத்திரம் ‘டெட்பூல் & வூல்வரின்’ படத்தின் மூலம் மார்வெல் உலகில் நுழைந்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - மல்டிவெர்ஸ் என்ற களத்தை மார்வெல் கையில் எடுத்தபிறகு பல சூப்பர்ஹீரோ கதைக்களங்களுக்கான கதவுகளை திறந்துவிட்டிருக்கிறது. அந்த வகையில் தனது யுனிவர்ஸில் வெறுக்கப்படும் நபராக மாறிப் போயிருக்கிறார் வூல்வரின். அவரிடம் உதவிகேட்டு வருகிறார் டெட்பூல். இதில் ஏற்படும் பிரச்சினையில் இருவருக்கும் சண்டை நடக்கிறது. ‘டெட்பூல்’ முந்தைய படங்களைப் போலவே இதிலும் பகடியும், ரத்தம் கொப்பளிக்கும் அதிரடி ஆக்‌ஷனும் நிறைந்துள்ளன.

சீரியஸ் தன்மை கொண்ட வூல்வரின் கதாபாத்திரமும், எப்போதும் பகடியாக பேசிக் கொண்டு திரியும் டெட்பூல் கதாபாத்திரமும் திரையில் செய்யப் போகும் அட்டாகாசங்கள் மார்வெல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. ‘லோகி’ தொடரில் வந்த வாய்ட் எனப்படும் வெற்றிடம், பிரம்மாண்ட ஆன்ட்-மேன் ஹெல்மெட் என ட்ரெய்லர் முழுக்க குறியீடுகளுக்கும் குறைவில்லை. இப்படம் வரும் ஜூலை 26 திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News