Dec 28, 2025
Thisaigal NewsYouTube
புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் 85,000 ரசிகர்கள் மத்தியில் மிரட்டிய 'ஜன நாயகன்' இசை வெளியீடு!
சினிமா

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் 85,000 ரசிகர்கள் மத்தியில் மிரட்டிய 'ஜன நாயகன்' இசை வெளியீடு!

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.28-

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, சுமார் 85,000 ரசிகர்கள் திரள புக்கிட் ஜாலில் தேசிய அரங்கையே நேற்று அதிர வைத்தது. மலேசியாவில் இதுவரை நடைபெற்ற மிகப் பெரிய தமிழ் இசை வெளியீட்டு விழா என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த இந்த நிகழ்வு, அதிகாரப்பூர்வமாக Malaysia Book of Recordsசில் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், விஜய் முழுநேர அரசியலுக்குச் செல்வதற்கு முன்பான கடைசிப் படம் என்பதால், அரங்கமே 'தளபதி' முழக்கங்களால் உணர்ச்சிப் பெருக்கில் மிதந்தது. 'தளபதி திருவிழா' என்ற பெயரில் நடந்த இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றதுடன், மலேசிய மண்ணை ஒரு புதிய உற்சாகத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றது.

Related News