Oct 19, 2025
Thisaigal NewsYouTube
லியோ வெற்றி விழா- தடையில்லா சான்றிதழ் ரெடி
சினிமா

லியோ வெற்றி விழா- தடையில்லா சான்றிதழ் ரெடி

Share:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல

வரவேற்பை பெற்று வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விஜய் கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு பாதுகாப்பு கோரி

காவல்துறைக்கு படத் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்தனர்.

இந்நிலையில், 'லியோ' பத்தின் வெற்றிவிழாவிற்கான தடையில்லா சான்று தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சான்று இன்று மாலை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை சென்னை காவல் ஆணையகரகத்தில் போக்குவரத்து காவல் துறை, பெருநகர காவல்துறை மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது .

இந்த கூட்டத்தில் பொது மக்கள் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்? யாரெல்லாம் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்பது குறித்து பேசப்பட்டது.

Related News