பாலிவுட் நடிகையான பூனம் பாண்டே, பிரபல மாடல் அழகி ஆவார். இவர் 2013-ஆம் ஆண்டு 'நஷா' எனும் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர், "லவ் இஸ் பாய்சன்" எனும் கன்னட படத்திலும், "மாலினி அண்ட் கோ" எனும் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இவர் 'பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வந்த பூனம் பாண்டே, தனது 32 வயதில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது சமூக வலைதளத்தில்
அதிகாரப்பூர்வமாக பதிவிடப்பட்டிருந்தது.
இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் அடுத்த நாளே நடிகை பூனம் பாண்டே தான் உயிருடன் இருப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், "நான் இருக்கிறேன்" - உயிருடன்.
ஊடகங்களில் வந்தது போல் பெண்களை தாக்கும் கர்ப்பப்பை புற்றுநோய் என் உயிரை பலி வாங்கவில்லை;
ஆனால், இந்நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத எண்ணற்ற பெண்களை நாள்தோறும் அது பலி வாங்குகிறது.