Oct 20, 2025
Thisaigal NewsYouTube
வரலட்சுமி திருமணம்; குடும்பத்துடன் நேரில் சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த சரத்குமார் போட்டோஸ்
சினிமா

வரலட்சுமி திருமணம்; குடும்பத்துடன் நேரில் சென்று பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த சரத்குமார் போட்டோஸ்

Share:

இந்தியா. ஜுன் 29-

தனது குடும்பத்துடன் டெல்லி சென்றுள்ள சரத்குமார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, வரலட்சுமி - நிக்கோலாய் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கினார்.

விக்னேஷ் சிவன் இயக்குனராக அறிமுகமான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் வரலட்சுமி. முதல் படத்திலேயே தனது வெகு இயல்பான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். நெகட்டிவ் ரோல் மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் வரலட்சுமி நடித்து வருகிறார். சமீபத்தில் ஹனுமான் படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். தற்போது தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் எளிய முறையில் இந்த நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற உள்ளது.

இதற்காக சரத்குமார் – ராதிகா சரத்குமார் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பிதழை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், கீர்த்தி சுரேஷ், மாதவன், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், நயன் தாரா, விக்னேஷ் சிவன், சித்தார்த் என பல பிரபலங்களுக்கும் திருமண அழைப்பிதழை வழங்கினர். அதே போல் தெலுங்கு, கன்னட திரையுலகிலும் முன்னனி நடிகர், நடிகைகளுக்கு திருமண அழைப்பிதழை வரலட்சுமி வழங்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவையில் வெற்றி பெற்று 3-வது முறை ஆட்சி அமைத்துள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்கான திருமண அழைப்பிதழை வழங்கினர். இதுதொடர்பான போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related News