Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மதராஸி படக் குழுவைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
சினிமா

மதராஸி படக் குழுவைப் பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

Share:

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

படத்தைப் பார்த்த பல திரைப்பிரபலங்கள் பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஷங்கர் படத்தைப் பாராட்டி அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் "மதராஸி பல சுவாரஸ்யமான தருணங்களைக் கொண்ட ஒரு பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

ஏ.ஆர் முருகதாஸ் உணர்ச்சிகளை அற்புதமாகக் கையாண்டுள்ளார். காதலையும் கிரைமையும் இணைத்த விதம் அற்புதம்.

சிவகார்த்திகேயனின் கதாபாத்திர சித்தரிப்பு சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அதை அவர் அற்புதமாக வெளிப்படுத்தினார் - ஓர் அதிரடி ஹீரோவாகவும் அசத்தியுள்ளார்! அனிருத்தின் பின்னணி இசை படத்திற்குப் பக்க பலமாக அமைந்துள்ளது. வித்யூத் ஜம்வல் பார்வையாளர்களை அவரது ஸ்டைலால் கட்டிப் போடுகிறார். இப்படத்தை வழங்கிய மொத்த படக் குழுவிற்கும் வாழ்த்துக்கள்! எனக் கூறினார்.

Related News