Dec 26, 2025
Thisaigal NewsYouTube
பராசக்தி படத்தின் முதல் தேர்வு வேறொரு நடிகர்
சினிமா

பராசக்தி படத்தின் முதல் தேர்வு வேறொரு நடிகர்

Share:

தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைக்க அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. ஒன்று விஜய்யின் ஜனநாயகன், அவரது கடைசிப் படம் என்பதாலேயே ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்த்தே ஆக வேண்டும் என ஆர்வத்தில் உள்ளார்கள்.

அண்மையில் இன்னொரு பட ரிலீஸ் அறிவிப்பும் வந்தது. அதாவது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள பராசக்தி படம் தான். வரும் 2026ம் வருடம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஒரு படம் தொடங்கும் போது இயக்குனர் ஒரு நடிகரை மனதில் வைத்தே எழுவார். ஆனால் அவரே படத்தில் ஒப்பந்தமாகி நடிப்பார் என்றெல்லாம் கூறி விட முடியாது. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பல மாற்றங்களுடன் படங்கள் வெளியானதும் உண்டு.

தற்போது பராசக்தி படம் குறித்து தான் சுதா கொங்கரா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், பராசக்தி படத்தை நான் சூர்யாவை வைத்து தான் எழுதினேன். கொரோனா நேரத்தில் கதையை கூட நான் அவரிடம் கூறினேன். அவருக்கும் பிடித்தது. படத்திற்காக சில விஷயங்கள் கூட செய்தோம். ஆனால் கடைசியில் படம் அவருடன் செய்ய முடியவில்லை. காரணம் சூர்யாவால் தொடர்ந்து தேதி ஒதுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

Related News