7 C-ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கி உள்ளார்.
இந்த படம், விஜய் சேதுபதி நடிக்கும் 51-வது படம் ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடைந்தது.
இப்படத்தின் முழுக்கதையும் மலேசியாவில் நடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இந்த படத்தை காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், ஆக்ஷன் காட்சிகள் அடங்கிய முழு நீள கமர்சியல் படமாக இப்படத்தை இடக்கி வருகிறார்.