Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இன்று ரூ.150 கோடி சம்பளம்.. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு?
சினிமா

இன்று ரூ.150 கோடி சம்பளம்.. பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ் தனது முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு?

Share:

இந்தியா, ஜுன் 28-

ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபால் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ் என அடுத்தடுத்து தோல்விகளையும் சந்தித்து வந்த பிரபாஸ் சலார் படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

ஆனால் தொடர் பிளாப் படங்களை கொடுத்தாலும் பிரபாஸின் இமேஜ் வளர்ந்து கொண்டே செல்கிறது. அவருடைய சம்பளமும் உயர்ந்து வருகிறார். 600 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கல்கி படத்திற்கு பிரபாஸின் சம்பளம் என்ன? தனது முதல் படத்துக்கு பிரபாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பான் இந்தியா ஹீரோவாக வலம் வரும் பிரபாஸ் கைவசம் தற்போது 5 படங்கள் உள்ளன. பிரபாஸின் படங்களால் இண்டஸ்ட்ரியில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடக்கும். அதுமட்டுமில்லாமல் சம்பளத்திலும் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் இருக்கிறார்.

சலார் 1 படத்திற்கு சுமார் பிரபாஸ் 120 கோடி சம்பளம் வாங்கினார் என்று கூறப்பட்டது. அதே போல் கல்கி 2898 ஏடி படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ.150 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபாஸ் 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயந்த் சி. பரஞ்சி இயக்கிய ஈஸ்வர் படம் நவம்பர் 11, 2002 அன்று வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்துக்கு பிரபாஸுக்கு வெறும் 4 லட்சம்தான் சம்பளம். இதனை பிரபாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்வ்

Related News