தமிழ் திரையுலகில் மூத்த இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது.
இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.