Oct 18, 2025
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ரீமேக் ஆகும் லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம்
சினிமா

மலேசியாவில் ரீமேக் ஆகும் லோகேஷ் கனகராஜின் கைதி திரைப்படம்

Share:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய கைதி திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க நரேன், அர்ஜுன் தாஸ், தீனா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாம் சி எஸ் இசையமைத்திருந்தார்.

தமிழில் வெளிவந்த கைதி திரைப்படத்தை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஹிந்தியில் ரீமேக் செய்திருந்தார். இன்று வரை லோகேஷின் மிகச் சிறந்த ஒன்றாக கைதி படம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கைதி திரைப்படத்தை தற்போது மலேசியாவில் ரீமேக் செய்கின்றனர். ரீமேக் செய்யப்படும் இப்படத்திற்கு 'Banduan' என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

Related News