Oct 20, 2025
Thisaigal NewsYouTube
அஜித் மச்சினனுடன் காதல் வலையில் உள்ள யாஷிகா - விளக்கம் கொடுத்த யாஷிகா அம்மா!
சினிமா

அஜித் மச்சினனுடன் காதல் வலையில் உள்ள யாஷிகா - விளக்கம் கொடுத்த யாஷிகா அம்மா!

Share:

ரிச்சர்ட்-யாஷிகா

தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் அஜித். அவரின் மனைவி ஷாலினி சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

அதன் பின் "காதல் வைரஸ்" திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த திரௌபதி படம் நல்ல ரீச் கொடுத்தது, இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தபோதும் ரிச்சர்டின் எதார்த்தமான நடிப்பு அவருக்கு திரைத்துறையில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து "ருத்ர தாண்டவம்" படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பரவலாக பேசப்பட்டது.

வைரல் போட்டோ

ரிச்சர்ட் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஹீரோவாக இருக்கும் சமயத்தில் நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக உள்ள புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக தகவல் வருகிறது.

இதற்கு யாஷிகாவின் அம்மா பிரபல நாளிதழ் ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்: அதில், ரிச்சர்ட் மட்டும் யாஷிகா இருவரும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. அதை நானும் கவனித்துக்கொண்டு தான் இருந்தேன்.

உண்மையில் அவர்கள் காதலிக்கவில்லை, இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த வதந்திக்கு யாஷிகாவின் அம்மா முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அஜித் மச்சினனுடன் காதல் வலையில் உள்ள யாஷிகா - விளக்கம் கொடுத்த யாஷிகா அம்மா! | Yashika Anand Mom About Daughter Viral Photo

Related News