Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார்?
சினிமா

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார்?

Share:

சினிமாவில் நடிக்க களமிறங்கும் நடிகர்களில் சிலர் ஒரு கதையைத் தேர்வு செய்து இன்னொரு கதையைக் கோட்டை விட்டு விடுவார்கள். அவர்கள் நழுவ விட அந்தக் கதை திரைப்படமாகி வெற்றியடைந்து விடும். 90களில் இருந்த நடிகர்கள் பலர் நான் இந்தப் படத்தை மிஸ் செய்தேன், இந்தப் படம் தவறி விட்டது என நிறைய விஷயங்கள் கூறி வருகிறார்கள். அப்படி 90களில் கலக்கிய நடிகர் ஆனந்த் தான் மிஸ் செய்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.

அவர் நடித்த ஹிட் படம் என்றால் முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது திருடா திருடா தான். அவர் ஒரு பேட்டியில், மௌன ராகம் படத்தில் கார்த்திக் ரோலில் நான் நடிக்க வேண்டியது எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பு பறி போய் விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அதற்கு முன் அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்தி நண்பனாக நடித்ததாகவும் ஆனால் சரியாக இல்லை என நீக்கப்பட்டு விட்டதாகவும் அதே சமயம் ரோஜா படத்தில் நடிக்கத் தம்மை அணுகியதாகவும், ஸ்டில் டெஸ்ட் எல்லாம் எடுத்து இறுதியில் செட் ஆகவில்லை என்று கூறித் தாம் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் ஆனந்த் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

Related News