Oct 20, 2025
Thisaigal NewsYouTube
நாங்க எல்லாம் அப்பவே அப்படி.. விஜய் - த்ரிஷாவின் இந்த போட்டோக்களை பார்த்து இருக்கீங்களா?
சினிமா

நாங்க எல்லாம் அப்பவே அப்படி.. விஜய் - த்ரிஷாவின் இந்த போட்டோக்களை பார்த்து இருக்கீங்களா?

Share:

இந்தியா, ஜூன் 25-

லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து பணியாற்றினர். அப்போதே கிசுகிசு எழத்தொடங்கியது. விஜய்யின் 50 வது பிறந்தநாளில் த்ரிஷா ஒரு செல்ஃபியை வெளியிட்ட பிறகு அவர்களின் டேட்டிங் குறித்த விஷயங்கள் சோசியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.கோலிவுட் நடிகர் விஜய் ஜூன் 22 அன்று 50 வயதை எட்டினார். ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சோகம் காரணமாக, தனது ரசிகர்களை பெரிய கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தென்னிந்தியத் திரையுலகில் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஒரு நாள் கழித்து அதாவது ஜூன் 23 அன்று நடிகர் த்ரிஷா விஜய் உடன் லிப்டில் இருக்கும் புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்தார்.இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குறிப்பாக நெட்டிசன்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வைரலாக்கினார்கள்.

தளபதி விஜய்யும், த்ரிஷாவும் 2005ஆம் ஆண்டு முதன்முதலில் இணைந்து நடித்த படம் கில்லி. இந்த திரைப்படம் பிளாக்பஸ்டராக மாறியது. சமீபத்தில் அதன் மறு வெளியீட்டில் கூட அது மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் ஆனது.இன்று வரை விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோர் சிறந்த திரை ஜோடி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்கள். இருவரும் கில்லிக்குப் பிறகு, ஆதி, திருப்பாச்சி, குருவி ஆகிய படங்களில் பணிபுரிந்தனர்.

Related News