Oct 20, 2025
Thisaigal NewsYouTube
இன்ஸ்டாகிராமை டெலீட் செய்த யுவன் சங்கர் ராஜா
சினிமா

இன்ஸ்டாகிராமை டெலீட் செய்த யுவன் சங்கர் ராஜா

Share:

இந்தியா, ஏப்ரல் 18-

சுமார் 2 மில்லியனுக்கும் அதிகமான Followers வைத்திருந்த பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த மிகச்சிறந்த இசையமைப்பாளர் தான் யுவன் சங்கர் ராஜா. அவருடைய இசையில் ஒளிபரப்பான அனைத்து பாடல்களும் மெகா ஹிட் பாடல்களாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. யுவன் பாடல்களுக்கு என்று எப்போதுமே ஒரு தனி மவுசு தமிழ் மக்கள் மத்தியில் உண்டு.

இந்நிலையில் தற்பொழுது அவர் பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் இசையமைப்பாளராக பயணித்து வருகிறார். இந்நிலையில் மதன் கார்த்தியின் வரிகளில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், தளபதி விஜய் அவர்களின் குரலில் சில தினங்களுக்கு முன்பு "கோட்" திரைப்படத்திலிருந்து "விசில் போடு" என்கின்ற முதல் சிங்கிள் பாடல் வெளியானது.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அதே நேரம் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு சரியாக இசையமைக்கவில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டும் தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து பல விஷயங்கள் இந்த பாடலில் பேசப்பட்டு இருந்தாலும் கூட இசை ரீதியாக அந்த பாடல் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்த சூழலில் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் கணக்கை டெலீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடைசியாக பதிவிட்ட பதிவிற்கு அதிக அளவில் நெகடிவ் கமெண்ட் வந்ததையடுத்து அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related News