கடந்த 2022ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் இருந்து வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் காந்தாரா. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதனுடைய அடுத்த பாகமாக தற்போது 'காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர் 1' எனும் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். ருக்மினி வசந்த், சப்தமி கவுடா, ஜெயராம், குல்ஷன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இன்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரம்மாண்டமான படமாக காந்தாரா சாப்டர் 1 தெரிகிறது என பலரும் தங்களது கருத்துக்களைச் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், காந்தாரா படத்தில் இருந்த அந்த தாக்கத்தை காந்தாரா சாப்டர் 1 டிரைலர் தரவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளது.
இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தில் தமிழ் டப்பிங் யார் பேசியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் மணிகண்டன்தான். காந்தாரா சாப்டர் 1 படத்தில் கதாநாயகன் ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங்கில் மணிகண்டன் குரல் கொடுத்துள்ளார்.