Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சினிமா

சிம்புவின் இந்த புதிய படத்தில் சாய் பல்லவி தான் நாயகியா, இந்த நடிகரும் நடிக்கிறாரா?

Share:

கொரோனா காலத்தில் தனது உடல் எடையைக் குறைத்து ஆளே மாறிய சிம்பு அதன் பின் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என நிறைய ஹாட்ரிக் வெற்றிகள் வெளியான நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக அவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் சிம்பு நடித்துள்ள நிலையில் அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்க டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிம்புவின் கைகளில் புத்தகத்தில் ரத்தக்கறையுடன் மறைக்கப்பட்ட கத்தி இருப்பதாகக் காணப்பட்டது.

இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் நடிகர் சந்தானமும் நடிக்கிறார் என்கின்றனர்.

Related News