Dec 17, 2025
Thisaigal NewsYouTube
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் அடுத்த படம்
சினிமா

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் அடுத்த படம்

Share:

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் அடுத்து நடித்திருக்கும் படம் கொம்பு சீவி. அந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அண்மையில் இந்த படத்தின் ட்றைலர் வெளியாகி இருந்தது.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கொம்பு சீவி படம் வரும் டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சண்முக பாண்டியன் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தான் அடுத்த படத்தில் நடிக்கிறாராம். தனுஷின் யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை இயக்கியவர் தான் மித்ரன் ஜவகர்.

அந்த படத்திற்கான முதல் கட்டப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என தெரிகிறது.  

Related News