Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ராஜ்குமார் ஹிரானி - ஷாரூக் கான் கூட்டணியில் ரிலீஸ்-க்கு தயாரான "டங்கி"
சினிமா

ராஜ்குமார் ஹிரானி - ஷாரூக் கான் கூட்டணியில் ரிலீஸ்-க்கு தயாரான "டங்கி"

Share:

மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியரான இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களை வழங்கி, பிளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார்.

'சஞ்சு,' 'பிகே,' '3 இடியட்ஸ்,' போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய 'முன்னா பாய்' என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் படங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.

இப்போது, ஷாருக்கானுடன் 'டங்கி' மூலம் முதல் முறையாக இணைந்திருக்கும் அவர் மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார்.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட 'டங்கி' திரைப்படத்தில் நகைச்சுவை

இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.

Related News