Jan 16, 2026
Thisaigal NewsYouTube
மீண்டும் காமெடியனாக நடிக்கிறார் சந்தானம்
சினிமா

மீண்டும் காமெடியனாக நடிக்கிறார் சந்தானம்

Share:

நடிகர் சந்தானம் ஹீரோவாக ஆன பிறகு காமெடியனாக நடிக்கவில்லை. ஆனால், ரசிகர்கள் அவர் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என தொடர்ந்து எதிர்பார்த்து வந்தனர். அண்மைய காலமாக சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகிறது. அதுவும் சிம்பு படத்தில் அவர் காமெடியனாக வரப் போகிறார், அது ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாக திரையில் அமையும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன்பின் எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகி வரும் STR 49 படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்கவுள்ளார் என உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் காமெடியனாக நடிக்க ரூ. 13 கோடி சம்பளமாக கேட்டுள்ளாராம் சந்தானம். அதற்கு தயாரிப்பாளரும் சரி எனக் கூறி முன்பணம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சந்தானம் இப்படத்தில் இணைந்ததற்கான அறிவிப்பு வெளிவரலாம்.

Related News