நடிகர் தனுஷ் இயக்கத்தில் அண்மையில் இட்லி கடை படம் வெளியாகி இருந்தது. அடுத்து அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
D56 என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். அதே தயாரிப்பாளர் தான் தனுஷ் - வெற்றிமாறனின் வடசென்னை 2 படத்தைத் தயாரிக்கப் போவதாக அண்மையில் அறிவித்து இருந்தார்.
தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தின் ஹீரோயின் யார் என்கிற தகவல் தற்போது வந்திருக்கிறது. சாய் பல்லவி தான் தனுஷுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார். அவர் ஏற்கனவே மாரி 2 படத்தில் தனுஷுடன் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு வரவேற்பு கலவையாக இருந்தாலும் ரவுடி பேபி பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனுஷ் மாரி செல்வராஜ் படத்தின் விளம்பரப் பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறதாம். படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.