Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கைதி- 2 இல்லையா? அடுத்து சுந்தர் சியுடன் இணையும் கார்த்தி
சினிமா

கைதி- 2 இல்லையா? அடுத்து சுந்தர் சியுடன் இணையும் கார்த்தி

Share:

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. கார்த்தி-லோகேஷ் இருவரின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. அண்மையில், லோகேஷ் இயக்கத்தில் கூலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அடுத்து அவர் கைதி 2 படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ரஜினி, கமலை இணைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் லோகேஷ் கனகராஜ் இறங்கி இருப்பதால் கார்த்தியின் கைதி 2 படம் தள்ளிப் போவதாகக் கூறப்படுகிறது.

இதனால், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இந்தப் படத்தில் நடிக்க திட்டமிட்ட கார்த்தி தற்போது கைதி 2 படத்தின் கால்ஷீட்டை சுந்தர்.சிக்குக் கொடுத்து விட்டாராம்.

இதன் காரணமாக சுந்தர்.சி, கார்த்தி இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News