Oct 18, 2025
Thisaigal NewsYouTube
ரஜினி - கமலை இயக்கவிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்…
சினிமா

ரஜினி - கமலை இயக்கவிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்…

Share:

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி அண்மையில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கூலி திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தைத்தான் இயக்கப் போவதாக ஏற்கனவே அவரே பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி - கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறாராம். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப் போவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இதற்காகக் கார்த்தியைச் சந்தித்து பேசியுள்ளாராம் கமல். கார்த்தி இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ரஜினி - கமல் படத்தை முடித்த பின் கைதி 2 படத்தை லோகேஷ் இயக்குவார் எனக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.

Related News