Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கதாநாயகனாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன்
சினிமா

கதாநாயகனாக அறிமுகமாகும் சிவாஜி கணேசனின் பேரன் தர்சன்

Share:

சிவாஜி கணேசனின் மற்றொரு பேரன் தர்சன் கணேசன் ஆவார். இவர் தற்பொழுது சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகனாவார். இவர் நடித்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழு யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ராம் குமாரின் மூத்த மகனான துஷ்யந்த் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருக்கிரார். பிரபுவின் மகனான விக்ரம் பிரபு ஏற்கனவே கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் தர்சன் கணேசனும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News