இந்தியா, ஜூன் 01-
அஜித்தின், 'குட் பேட் அக்லி' படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளதாகவும், ஸ்ரீலீலாவிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கதாநாயாகி குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படம் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளது. இந்த படத்தை முடித்த கையேடு, தல அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது, ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில்... இந்த படப்பிடிப்பில் அஜித்தின் அறிமுக பாடல் காட்சி மற்றும் ஒரு அதிரடி ஸ்டாண்ட் காட்சி தான் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
அடுத்த வாரம், ஆதாவது ஜூன் 7ஆம் தேதியோடு, 'குட் பேட் அக்லி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ய ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக கதாநாயகியுடன் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியபோது, கணவர் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுப்பது போல் கொடுத்து, பின்னர் அஜித் தன்னுடைய படத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு கோபத்தை மனதில் வைத்து கொண்டு, ஏதேதோ கதைகளை சொல்லி நயன்தாரா முடியாது என சொல்லி விட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தாலும், உண்மை நிலவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதே போல், இப்படத்தின் முக்கிய கேரக்டரில் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், அவரையும் டீலில் விட்டு விட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் பிரபல நடிகையிடம் தான் தற்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம்.
அவர் வேறு யாரும் அல்ல நடிகை கீர்த்தி சுரேஷ் தான்... பல படங்களில் விஜய்யுடன் போட்டுள்ள கீர்த்தி இந்த முறை அஜித்துக்கு ஜோடி போட தயாராகி உள்ளார். அஜித்தின் ஜோடி என்றால் கதையே கேட்காமல் கூட நடிக்க தயாராக இருக்கும் கீர்த்தி, இப்படை ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதை கண்டிப்பாக மிஸ் பண்ண மாட்டார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது. எனினும் 'குட் பேட் அல்கி' பட நாயகி யார் என்று படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.