Oct 18, 2025
Thisaigal NewsYouTube
கார்த்தியின் மார்ஷல் படத்தில் வில்லனாக பிரபல நடிகர்
சினிமா

கார்த்தியின் மார்ஷல் படத்தில் வில்லனாக பிரபல நடிகர்

Share:

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மெய்யழகன். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ஸ்வாதி என பலர் நடித்த இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

உறவுகளின் பாசத்தை உணர்த்தும் படமாக அமைந்த மெய்யழகன் பெரிய அளவு வசூலும் செய்தது. கடந்த ஆண்டு இப்படம் வெளியானது. அதன் பின் கார்த்தி நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

ஆனால் வா வாத்தியார், சர்தார் 2, கைதி 2, மார்ஷல், சுந்தர்.சி படம் என தொடர்ந்து படங்களைக் ஒப்பந்தமாகி, பரபரப்பாக நடிப்பதுமாக உள்ளார்.

வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி மார்ஷல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க மலையாள சினிமா நடிகர் நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாம்.

ஆனால் கடைசியில் அவர் நடிக்க முடியாததாக் அவருக்கு பதில் பிரபல தமிழ் சினிமா நடிகர் ஆதி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் நல்ல தேர்வுதான் எனக் கூறி வருகிறார்களாம்.

Related News