இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி படத்தின் விளம்பரத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கூலி படத்தை விளம்பரம் செய்தார்.
லோகேஷின் முந்தைய படமான லியோவில் விஜய் நடித்து இருந்தார். அது எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமாக இருந்தது. விஜய் இனி எல்சியு படங்களில் நடிப்பாரா என்பது பற்றி கல்லூரி நிகழ்ச்சி மேடையில் பேசி இருக்கிறார் லோகேஷ்.
விஜய் இல்லாமல் எல்சியு இருக்காது. ஆனால் அவர் அதில் நடிப்பாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். இப்போது அவரது எண்ணம் என்ன என்பது உங்களுக்கு தெரியும், அவரது முயற்சியும் தெரியும். என் சினிமாவுக்காக அதை பற்றி சொல்வது சரியாக இருக்காது என நினைக்கிறேன். எப்போதுமே எல்சியு விஜய் அண்ணா இல்லாமல் முழுமை அடையாது" என லோகேஷ் கூறி இருக்கிறார்.