Nov 28, 2025
Thisaigal NewsYouTube
தனுஷின் புதிய படத்தில் முன்னணி மலையாள நடிகர்
சினிமா

தனுஷின் புதிய படத்தில் முன்னணி மலையாள நடிகர்

Share:

நடிகர் தனுஷ் நடிப்பில் ஹிந்தியில் Tere Ishk Mein என்ற படம் வெளியாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இப்படத்தில் கீர்த்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார்.

தற்போது நடிகர் தனுஷ், அமரன் பட புகழ் ராஜ் குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

அந்த படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நாயகன் மம்முட்டி நடிக்க இருப்பதாகவும் அவருக்கு இப்படத்திற்காக ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இந்த புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News